செவ்வாய்க்கிழமை இரவு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து அமெரிக்கா தனது அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் (ICBM) சோதனையை நடத்தியது.
GT 254 எனப் பெயரிடப்பட்ட இந்த ஆயுதமற்ற ஏவுகணை இரவு 11:00 மணிக்கு ஏவப்பட்டு பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்ஷல் தீவுகளுக்கு அருகே அதன் இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது.
“செயல்திறன், தயார்நிலை மற்றும் துல்லியத்தை சரிபார்க்க” ஏவுகணை ஏவப்பட்டது என்று விமானப்படை குளோபல் ஸ்ட்ரைக் கமாண்ட் தெரிவித்துள்ளது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ‘டூம்ஸ்டே’ ஏவுகணையை சோதித்துள்ளது; அது என்ன?
