பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தகவலுக்காக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. விசாரணையை மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரி ரோனன் டைரர், இந்தச் சம்பவத்தை இனரீதியாகத் தூண்டப்பட்ட தாக்குதலாகக் கருதுவதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், குற்றவாளியைக் கைது செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று உறுதியளித்தார். காவல்துறையினர் சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை
