அறிவியல் தொழில்நுட்பம்: சீன வளர்ச்சி முன்னேற்றத்துக்கான வலுவான உந்து ஆற்றல்

Estimated read time 1 min read

 

பெய்தாவ் புவியிடங்காட்டி செயற்கைக்கோள் அமைப்பு முறை, ஃபாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி, டீப்சீக் முதலியவை சீன அறிவியல் தொழில்நுட்பத்தின் தற்சார்பையும் வலிமையையும் பிரதிபலிக்கும் தொழில்நுட்பங்கள் ஆகும். இவை ஒரு வலுவான எஞ்சின் போல சீனப் பாணி நவீனமயமாக்கத்தை மட்டுமல்லாமல் உலகின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் முன்னெடுத்து வருகிறது.

ஆனால் நவீனமயமாக்கல் நாடாக முன்னோக்கிச் செல்லும் பாதையில் அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளின் சில்லு விநியோகத் துண்டிப்பு உள்ளிட்ட தடையைச் சீனா சந்தித்துள்ளது.

உயர் தர வளர்ச்சியை நனவாக்கவும், அருமையான வாழ்க்கை மீதான மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், தொழில்நுட்பச் சிக்கலை தற்சார்பு புத்தாக்கத்தின் மூலம் தோற்கடித்து வெற்றிபெற வேண்டும் என்பதை சீனா உணர்ந்துள்ளது. இதையடுத்து, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த அறிவியல் தொழில்நுட்பத் தற்சார்பு மற்றும் வலிமையான பாதையில் சீனா காலடியெடுத்து வைத்துள்ளது.

இப்பணியில் முதலாவதாக, நாட்டின் புத்தாக்கச் சூழல் அமைப்பு முறையை மீண்டும் உருவாக்கி, அடிப்படை ஆய்வுக்கான ஒதுக்கீட்டைச் சீனா தொடர்ந்து விரிவாக்கியுள்ளது. சிறந்த திறமை மற்றும் உகந்த கட்டமைப்புடன் கூடிய அறிவியல் தொழில்நுட்ப திறமைசாலி அணியையும் உருவாக்கியுள்ளது.

இரண்டாவது, தொழில்நுட்ப முற்றுகையைத் தூண்டுதல். அரசின் வழிகாட்டுதலின்படி நாட்டின் வளங்களை ஒருங்கிணைத்து தேசிய ஆய்வகம், அறிவியல் ஆய்வு நிறுவனம், உயர் நிலைக் கல்லூரி முதலிய அறிவியல் தொழில்நுட்ப சக்தியைத் திரட்டியுள்ளது.

மூன்றாவது, அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மூலம் தொழில்துறையின் சாதகங்களை மாற்றுதல். இதன்பொருட்டு அடிப்படை ஆய்வு, தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மாற்றத்துடன் ஒன்றிணைந்த பன்முகச் சங்கிலி அமைப்பு முறையைச் சீனா உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு உலகப் புதாக்க குறியீடு தரவரிசையில் உலகின் 11ஆவது இடத்தைச் சீனா முன்னெடுத்துள்ளது.

மேலும், தொழில்நுட்ப ரீதியில் ஒருதரப்புவாதத்தைச் சீனா உடைத்து உலகத்துக்கான பொது உற்பத்திப் பொருட்களை வழங்கியுள்ளது. பெய்தாவ் புவியிடங்காட்டி செயற்கைக்கோள் அமைப்பு முறை உலகளாவிய 200க்கும் அதிகமான நாடுகளுக்குச் சேவையளித்து வருகின்றது. அதுபோன்றே ஃபாஸ்ட் ரேடியோ தொலைநோக்கியும் உலகத்துக்கும் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் அறிவியல் தொழில்நுட்பம் உலகின் புத்தாக்க வலைப்பின்னலில் முன்முயற்சியுடன் இணைந்துள்ளது. உலகின் அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகத்துக்கும் சீனாவின் திட்டத்தை வழங்கியுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author