ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் பயண திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுலா தளங்கள் உள்ளன.
மேலும், அங்கு பல்வேறு சிறுசிறு தீவுகளும் நீண்ட கடற்கரையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், சிறிய ரக கப்பல் சேவைகளை அங்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் சுற்றுலாத் தளங்களை இணைக்க தமிழக அரசு முடிவு செய்து கப்பல் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கப்பல் சேவைகளை தொடங்க முடிவு
Estimated read time
0 min read