நீலகிரி, கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு  

Estimated read time 1 min read

தெற்கு உள் கர்நாடகம் முதல் தெலங்கானா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியான அறிக்கையின்படி, மார்ச் 6, 7, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மார்ச் 8, நீலகிரி, கோவை மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதே போல, மார்ச் 9 – 11 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author