இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

Estimated read time 0 min read

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உலகின் தெற்கு பிராந்தியத்தில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் “போட்டியாளர்களாகப் பார்க்காமல் கூட்டாளிகளாகவும்”, “அச்சுறுத்தலாகப் பார்க்காமல் நல்வாய்ப்பாகவும்” கருத வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் சரியான பார்வையுடன் அணுக வேண்டும் என்றும், எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கூட்டாகப் பேணி பாதுகாத்து, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும், அதேவேளையில் பிரிவினையும் மோதலும் ஆசியாவின் மறுமலர்ச்சிக்குத் தீங்கானது,” என்றார்.

You May Also Like

More From Author