அணு ஆயுத குறைப்பு பற்றி அமெரிக்கா ரஷியாவுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில் சீனாவும் பங்கேற்க வேண்டும் என விரும்புவதாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
சீன-அமெரிக்க-ரஷிய முத்தரப்பு அணு ஆயுத குறைப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, இதில் சீனா பங்கேற்பதற்கான கோரிக்கை நியாயமற்றதாகவும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் இருக்கும் என்று இது குறித்து 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுவேன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்ற கொள்கையைச் சீனா பின்பற்றி வருகிறது. தற்காப்பு அணு ஆற்றல் நெடுநோக்கில் ஊன்றி நின்று சொந்த அணு ஆற்றல் இருப்பை நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான மிக குறைந்த அளவில் நிலைநிறுத்தி வருகிறது. சீனாவின் அணு ஆற்றலும் கொள்கையும் உலக அமைதிக்கான முக்கிய பங்களிப்பாகும் என்றார்.