ஏபெக் உச்சிமாநாட்டில் வல்லரசின் பொறுப்பைக் காட்டிய சீனா

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அக்டோபர் 30ம் நாள் முதல் நவம்பர் முதலாம் நாள் வரை தென்கொரியாவின் கியொங்ஜுவி நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டில் பங்கெடுத்து, தென்கொரியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணம் குறித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு நிறைவடைந்த பின்னர், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மேற்கொண்ட ஒரு முக்கிய தூதாண்மை பயணம் இதுவாகும். 3 நாட்களில் அவர் 10க்கும் மேலான நடவடிக்கைகளில் பங்கேற்றி, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புக்குத் தலைமை வகித்து, வல்லரசுக்கு உரிய பொறுப்பை ஏற்றி, அண்டை நட்புறவை வலுப்படுத்தி, சீன அனபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சீனா, கூட்டு நலன் மற்றும் பொறுமை மூலம் பொது செழுமையை முன்னேற்றி, நியாயத்தைப் பேணிக்காத்து வருகிறது. சர்வதேச ஒழுங்கு மற்றும் ஆசிய-பசிபிக் பிரதேச ஒத்துழைப்புக்கு சீனாவின் செல்வாக்கும் உந்து சக்தியும் அதிகரித்து வருவதாக உலகளவில் கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author