ஈரான் போர்: 67,000 இந்தியர்கள் மீட்பு; மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரை  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார்.
பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர், இந்தியாவிற்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசிப்பதாலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இந்த பிராந்தியத்தைச் சார்ந்து இருப்பதாலும் இந்தியா நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறினார்.

You May Also Like

More From Author