வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு 

ஆந்திரா: குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்காளரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வரிசையில் நிற்காமல் அந்த சட்டமன்ற உறுப்பினர் முந்திக்கொண்டு வாக்களிக்க சென்றிருக்கிறார்.
அதை தட்டிக்கேட்ட ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த அந்த வாக்காளர் சட்டமன்ற உறுப்பினரை அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஐபி கலாச்சாரத்தின் இந்த வெட்கக்கேடான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தெனாலியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிவக்குமார் ஒரு வாக்காளரை நெருங்கி அவரது முகத்தில் அறைந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வாக்காளர் எம்எல்ஏவுக்கு பதிலடி கொடுத்ததும் எம்எல்ஏவின் ஆட்கள் சேர்ந்து அந்த வாக்காளரை அடித்து துவைத்துவிட்டனர்.

You May Also Like

More From Author