10வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 9) பத்தாவது நாளை எட்டியுள்ளது.
ஈரானின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் போரை ஒரு புதிய கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளன.
பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலியத் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி (56) ஈரானின் புதிய உச்ச தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.
ஈரானின் சக்திவாய்ந்த நிபுணர்கள் குழு இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஈரானின் புரட்சிகரக் காவல்படை இவருக்குத் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author