மத்திய கிழக்கு போர் சூழல்: ஈரான் அதிபரிடம் கவலை தெரிவித்த பிரதமர் மோடி  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
போர் தொடங்கிய பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி உரையாடல் இதுவாகும்.
இந்த உரையாடலின் போது, போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து தனது கவலையை பிரதமர் மோடி பதிவு செய்தார்.
இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர உறவுகள் மட்டுமே தீர்வாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author