வர்த்தக சர்ச்சையை பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்க்குமாறு அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தல்

சீனாவுடனான வர்த்தக மோதலை சமத்துவமான பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் தீர்க்க வேண்டும் என சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹெ லீஃபெங் 11ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் தெரிவித்தார்.

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் கலந்தாய்வு அமைப்புமுறையின் முதல் கூட்டம் ஜுன் 9、10 ஆகிய நாட்களில் லண்டனில் நடைபெற்றது. இதில், சீனாவும் அமெரிக்காவும் மனம் திறந்த முறையிலும் ஆழமாகவும் பேச்சுவார்த்தை நடத்தின. தத்தம் அக்கறை கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. இரு நாட்டு அரசுத் தலைவர்களும் ஜுன் 5ஆம் நாள் தொலைபேசி மூலம் கலந்துரையில் ஒத்த கருத்துக்கள் மற்றும் ஜெனீவாவில் எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்துக்களுக்கான கட்டுகோப்புகள் குறித்து இரு தரப்பும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டன.

இது குறித்து ஹெ லீஃபெங் கூறுகையில், சீன மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் சாரம்சம், பரஸ்பரம் பயன் தரும் வெற்றி-வெற்றி என்பது ஆகும். பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு கூட்டத்தில் சீனா நேர்மையாகவும் கொள்கை ரீதியாகவும் கலந்துகொண்டுள்ளது என்று தெரிவித்தார். அடுத்த கட்டமாக, இரு நாட்டு அரசுத்தலைவர்களும் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களின்படி, சீனா அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு அமைப்புமுறையின் பங்காற்றவும், ஒருமித்த கருத்துக்களை அதிகரிக்கவும், கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். மேலும், இரு தரப்பும் ஒரே திசையை நோக்கி இணைந்து செயல்பட வேண்டும் என்று, உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பதில் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டம் குறித்து அமெரிக்காவின் பிரதிநிதிகள் கூறுகையில், நடப்பு கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான சாதனைகள் பெறப்பட்டுள்ளன. இரு தரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவை நிதானப்படுத்த இது உதவியது என்றும், இரு நாட்டு அரசுத்தலைவர்களின் ஒத்த கருத்துக்களின்படி சீனாவுடன் இணைந்து செயல்பட்டு, இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்துக்களை கூட்டாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில், ​​அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெஸென்ட், அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லூட்னிக் முதலியோருடன், சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹெ லீஃபெங் இவ்வாறு தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author