ஈபிஎஸ் வழங்கும் இஃப்தார் விருந்து.. அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு..!!

Estimated read time 1 min read

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 15.3.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில், சென்னை, எழும்பூர், தனியார் மஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள். தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author