தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் பார்வைத்திறன் 100 மீட்டருக்கும் குறைவாகக் குறைந்ததால், விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுவரை சுமார் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மிகக் குறைந்த பார்வைத்திறனிலும் விமானங்களை தரையிறக்க உதவும் ‘CAT III’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், வானிலை சவாலாகவே உள்ளது.
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
