15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் சீனா

சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் அண்மையில் இனிதே நிறைவடைந்தன. நடப்பு இரு கூட்டத்தொடர்கள், சீனாவின் எதிர்காலச் செயல் பணித்திட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, பல்வேறு நாடுகள் கூட்டுச் செழுமையை நனவாக்குவதற்குரிய வரைபடத்தையும் வழங்கியுள்ளதாகச் சர்வதேச சமூகத்தில் பொதுவாகக் கருதப்பட்டுள்ளது.

பயனுள்ள முறையில் நீண்டகாலத் திட்டத்தைச் செயல்படுத்தும் சீனா, உலகின் பல்வேறு நாடுகள் பயன்படுத்தக்கூடிய வளர்ச்சி மாதிரியை உருவாக்கியுள்ளது என்று பிரேசில் ஊடகம் ஒன்று வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளது.

1953ஆம் ஆண்டின் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் முதல், 2026ஆம் ஆண்டின் 15வது ஐந்தாண்டுத் திட்டம் வரையிலான காலத்தில் சீனா முந்தைய வறுமை நிலையில் இருந்து பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி, சமூகத்தின் நீண்டகால நிலைத்தன்மை ஆகிய இரு அற்புதமான சாதனைகளைப் பெற்று, சோஷலிச நவீனமயமாக்கத்தை நனவாக்குவதற்கு மேலும் வலிமையான அடிப்படையை உருவாக்கியுள்ளது. இது பற்றிச் சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்முக தலைமை, அறிவியல் முறையிலான ஒருங்கிணைப்பு, நெடுநோக்கு மனவுறுதி ஆகியவை, இதற்கு காரணங்களாகும் என்று தெரிவித்தனர்.

அடுத்த 5 ஆண்டுகளில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு இலக்கு, சீரான வரம்புக்குள் நிலைநிறுத்தப்படும். இதன் மூலம், 2035ஆம் ஆண்டு நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட ஒரு மடங்கு அதிகரித்து, இடைநிலை வளர்ந்த நாட்டின் நிலையை எட்டுவதற்கு அடிப்படையை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 15ஆவது ஐந்தாண்டுத் திட்டவரைவிலுள்ள 20 முக்கிய இலக்குகளில், மக்களின் வாழ்வாதாரம் பற்றிய 7 இலக்குகள் உள்ளன. இது மூன்றில் ஒரு பங்காகும்.

அடுத்த 5 ஆண்டுகளில், மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுதல், 4 உலகாவிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல், உலகப் பொருளாதார நிர்வாகத்தில் ஆக்கமுடன் பங்கெடுத்து, அதற்கு வழிகாட்டுதல் முதலிய பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிக்கலான சர்வதேச நிலைமையில், பொறுப்புணர்வு கொண்ட, நம்பத்தகுந்த மற்றும் சார்ந்திருப்பதற்குரிய பெரிய நாடாக சீனா எப்போதுமே திகழ்கிறது. அத்துடன், உலகத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும்  நீதியைப் பேணிக்காக்கும் மிக முக்கியமான நாடாகவும் சீனா திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author