ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தல்!

Estimated read time 1 min read

போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்..

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூர் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலின் போது ஈரானில் அதிகரித்துள்ள பதற்றங்கள், பொதுமக்கள் உயிரிழப்பு, பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடும் சேதம் உள்ளிட்டவை குறித்த கவலையை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இரு தரப்பில் நடைபெற்ற உரையாடலில் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, ஏற்றுமதி, தடையற்ற எரிசக்தி போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அமைதியான வழியில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஈரான் அதிபரிடம் வலியுறுத்தியதாகவும், ராஜாங்க ரீதியில் பிரச்சனைகளை தீர்க்கும் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author