இடுக்கியில் நிலச்சரிவு – 3 பேர் பலி, பலர் மாயம்

Estimated read time 0 min read

கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். வீடுகள் மண்ணில் புதைந்ததால் பலரும் மாயமாகினர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பம்பை, கக்கட்டார் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் இடுக்கியின் பல பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள கூடயத்தூர் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக பலியானார்.

இடுக்கியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தற்போது இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author