எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்; இனி கிராமப்புறங்களில் 45 நாட்கள் இடைவெளி  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி தேவையைச் சீரமைக்க, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.
தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தைச் சீராக மேலாண்மை செய்யவும் கீழ்க்கண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 45 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் (இதற்கு முன் 25 நாட்களாக இருந்தது).
நகர்ப்புறங்களில் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author