சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லி செங்கோட்டையில் ‘அபிஞான்’ செயலி, முக அடையாளம் காணும் FRS கேமராக்கள் என கண்காணிப்பு தீவிரம்  

Estimated read time 1 min read

இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த தேசிய விழாவில், சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டறிய டெல்லி காவல்துறை அதிநவீனத் தொழில்நுட்பங்களை முதன்முறையாக பரவலாக பயன்படுத்தி வருகிறது.
டெல்லி காவல்துறை தனது சோதனைகளுக்காக ‘அபிஞான்’ என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தி வருகிறது.
ஒரு கோடிக்கும் அதிகமான குற்றவாளிகளின் கைரேகை தரவுகளை கொண்ட இந்தச் செயலியின் மூலம், சந்தேகப்படும் நபர்களின் கைரேகைகள் கையடக்க கருவிகள் வாயிலாகச் சில வினாடிகளில் சரிபார்க்கப்படுகின்றன.
மேலும், கூட்டத்தில் இருக்கும் முகங்களை ஸ்கேன் செய்து குற்றவாளிகளின் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் FRS வசதி கொண்ட சிறப்பு ரோந்து வாகனங்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author