தோனிக்கு குவியும் பணம்… BCCI கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?

Estimated read time 1 min read

சென்னை : ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது ஐபிஎல் (IPL) தொடர்களில் மட்டுமே விளையாடி வரும் தோனி, விளம்பரங்கள் மற்றும் பல்வேறு வணிக முதலீடுகள் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இதற்கிடையே, அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே, முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ (BCCI) வழங்கும் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானார்.

பிசிசிஐ வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம்?

இந்திய அணிக்காக மூன்று ஐசிசி (ICC) கோப்பைகளை வென்று தந்த ஒரே கேப்டனான தோனி, பிசிசிஐ-யிடமிருந்து கணிசமான அளவு ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டில் தனது முன்னாள் வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை பிசிசிஐ உயர்த்தி மாற்றியமைத்தது.

இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 25 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள முன்னணி வீரர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார். பிசிசிஐ விதிகளின்படி, 25 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் விளையாடும் வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனிக்கும் மாதந்தோறும் ரூ. 70,000 ஓய்வூதியமாகக் கிடைத்து வருகிறது.

தோனியின் ஒட்டுமொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது பிசிசிஐ வழங்கும் இந்த ஓய்வூதியம் மிகவும் குறைவானதாகவே தோன்றும்; ஏனெனில் தோனி சிஎஸ்கே (CSK) அணிக்காக ஒரு சீசனுக்கு ரூ. 4 கோடி சம்பளமாகப் பெறுகிறார். இது தவிர பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம்?

பிசிசிஐ தரப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை விவரம் பின்வருமாறு…

You May Also Like

More From Author