ஆட்சியமைக்க திமுகவுடன் இபிஎஸ் பேசியதாக இன்று காலையில் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுக பொதுச்செயலாளர் கூட்டிய கூட்டத்துக்கு ஏன் சி.வி. சண்முகம் வரவில்லை? வருவதற்கு என்ன பயம்? ஏன் வரவில்லை? விழுப்புரத்தில் முன்பு போட்டியிட்ட சி.வி.சண்முகம் ஏன் தோற்றுப் போனார்? திமுகவுடன் அதிமுக பேசவில்லை என்று சத்தியம் செய்ய முடியும். திமுகவுடன் ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வரும் தேர்தல்களில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் திமுகவுடன் ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது 100% உண்மை. பாமகாவால்தான் அதிமுக வெற்றி பெற்றது என்றால் 2016ல் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தோற்றது ஏன்? மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் சி.வி.சண்முகம்” என்றார்.
