நிர்வாக செயல்திறன் பற்றிய கருத்து என்பது தற்போது சீனாவில் பிரபலமான வார்த்தையாகும். நிர்வாக செயல்திறன் பற்றிய சரியான கருத்து என்ன? நிர்வாக செயல்திறன் பற்றிய சீனாவின் கருத்து மேற்கத்திய நாடுகளிலிருந்து வித்தியாசம் என்ன ஆகியவை பற்றிய விவாதம் சீன மக்களிடையில் நடைபெற்று வருகிறது.
சுருக்கமாக கூறினால், சீனாவில் நிர்வாக செயல்திறன், புள்ளிவிவர அறிக்கைகளுக்கு மாறாக, பொது மக்களின் சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. கலங்கிய நதி தெளிவாக மாறுவது, பாலைவனத்தில் சோலை உருவானது, வறுமையாக இருந்த கிராமப்புறத்தில் வாழ்க்கை நிலை மேம்பட்டு வருவது போன்றவை சீனாவில் உண்மையான நிர்வாக சாதனைகளாகும். இதுதான், சீனாவின் ஆளும் கட்சியின் தலைமையில் சீனர்கள் மாபெரும் திட்டத்தை உண்மையாக மாற்றுவதற்கான இரகசியமாகும்.
சீனாவில், முழக்கம் அல்லாமல், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதா இல்லையா என்பதன் மூலம் நிர்வாக செயல்திறன் அளவிடப்படுகிறது.
மணல் கட்டுப்பாடு, வெள்ளத்தடுப்பு, கிராமப்புற கட்டுமானம் உள்ளிட்டவற்றில் ஒரே நாளில் சாதனை பெற முடியாது. விடா முயற்சியுடன் பணிகளை அடுத்தடுத்து செய்வது சீனாவின் வழிமுறை.
மேலை நாடுகளில் முன்னாள் அதிகாரியின் பணியை அடுத்த அதிகாரி புறக்கணிக்கும் நிர்வாக கருத்திலிருந்து வேறுபட்டதாக, சீனாவில் இத்தகைய பணிகள் அதிகாரி அல்லது பணியாளரின் மாற்றத்தால் பாதிக்கப்பட முடியாது என கோரப்படுகிறது.
நிர்வாக செயல்திறன், பணி அறிக்கையிலுள்ள புள்ளிவிரங்கள் மட்டுமல்ல, பொது மக்களின் மலர்ந்த முகங்களிலும் காணப்படுகிறது. சீனாவில் நிர்வாக செயல்திறன் பொது மக்களாலே மதிப்பிடப்படுகிறது. நிர்வாக செயல்திறன் பற்றிய சீனாவின் கருத்து உண்மையான செயல்பாடு மற்றும் நெடுநோக்கு பயனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பொது மக்கள் அனைவரும் நல்ல வாழ்க்கை நடத்துவது இதன் நோக்கம். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறியதைப் போல், சாதனைகள் உண்மையான முயற்சிகளால் பெறப்படுகிறது.
