இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச இடைக்கால அரசு தனது நாட்டுத் துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி சுடும் தளத்தில் பிப்ரவரி 2 முதல் 14 வரை நடைபெறவுள்ள ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப அந்நாட்டு இடைக்கால அரசு மறுப்பு தெரிவித்தது.
டி20 உலகக்கோப்பை புறக்கணிப்புக்கு இடையே இந்தியா வரும் வங்கதேச துப்பாக்கி சுடும் அணி
