ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர் 2’: பட்ஜெட் மற்றும் வசூல் எதிர்பார்ப்பு  

Estimated read time 1 min read

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஸ்பை திரில்லர் படமான ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ரன்வீர் சிங்கின் அபாரமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்திய சினிமாவின் மிக விலையுயர்ந்த படங்களில் ஒன்றான இது, சுமார் 300 முதல் 475 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இப்படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய வேடங்களில் நடித்துள்ள சஞ்சய் தத் 10 கோடி ரூபாயும், மாதவன் 9 கோடி ரூபாயும் பெற்றுள்ளனர்.
கதாநாயகி சாரா அர்ஜுன் மற்றும் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் ராம்பால் தலா 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author