டிரம்ப்-சனே தகைச்சி சந்திப்பு

Estimated read time 1 min read

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 19ம் நாள் வெள்ளை மாளிகையில் ஜப்பான் தலைமை அமைச்சர் சனே தகைச்சியைச் சந்தித்துரையாடினார். அப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், கூட்டணி நாடுகளுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிவளித்த போது, சனே தகைச்சிக்கு முன்னிலையில், 1941ம் ஆண்டில் ஜப்பான் படை, பேர்ள் துறைமுகத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவத்தைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ஆயத்தமில்லாத ஈரானைத் தாக்க விரும்பினோம். எதிர்பாராத விதமாகச் செயல்படுவதில், ஜப்பானை விட, சிறந்த நாடு உண்டா? என்று தெரிவித்தார்.

1941ம் ஆண்டில், ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்க பேர்ள் துறைமுகத்தின் மீது ஜப்பான் திடீர் தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 3600 அமெரிக்கர்கள் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தனர். அப்போதைய அமெரிக்க அரசுத் தலைவர் ரூஸ்வெட் அந்த நாளை அமெரிக்காவின் இழிவான நாள் என்று கூறினார். அந்த நாள் முதல், 2வது உலகப் போரில் அமெரிக்கா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியது.

படம்:VCG

 

You May Also Like

More From Author