சீன வளர்ச்சி மன்றத்தின் 2026ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி மற்றும் பொருளாதார விவகாரத்துக்கான மத்திய கமிட்டி அலுவலகத்தின் துணை இயக்குநரும், கிராமப்புறப் பணிக்கான மத்திய தலைமை குழு அலுவலகத்தின் இயக்குநருமான ஹான் வென்சியூ இக்கூட்டத்தில் கூறுகையில், 15வது ஐந்தாண்டுத் திட்டம், உலகின் பல்வேறு நாடுகளுடன் புதிய வாய்ப்புகளைக் கூட்டாக உருவாக்கி பகிர்ந்து கொள்ளும் திட்டமாகும் என்றார்.
மேலும், 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவு, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியில் ஊன்றி நின்று, பொருளாதாரத்தின் இயக்காற்றல் மற்றும் உயிராற்றலை எழுப்பியுள்ளது. நவீனத் தொழில் துறையின் அமைப்புமுறையைக் கட்டியமைத்தல், உயர்நிலை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை அயவலிமைப்படுத்தல் ஆகிய 2 கடமைகள் இந்த திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், கடந்த பல ஆண்டுகள் முயற்சிகளுடன், சீனாவின் தற்சார்புப் புத்தாக்க ஆற்றல் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. வெளிப்புறச் சக்திகள் சீனாவின் வளர்ச்சிப் போக்கை மாற்றுவது கடினம் என்றும் அவர் கூறினார்.
