சீனத் துணை அரசுத்தலைவர் ஹன் செங் டிசம்பர் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுலை சந்தித்து பேசினார்.
அப்போது ஹன் செங் கூறுகையில், ஜெர்மனியின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, சீன மற்றும் ஜெர்மனி உயர் மட்ட அதிகாரிகள் நெருக்கமான பரஸ்பர தொடர்புகளை நிலைநாட்டி வருகின்றனர் என்றார். சீனாவும் ஜெர்மனியும் ஒன்றுக்கொன்று முக்கியமான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கூட்டாளிகளாக திகழ்கின்றன. இரு தரப்பும் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுகின்றன என்று அவர் தெரிவித்தார். மேலும், இரு நாட்டு தலைவர்களின் முக்கியமான பொது கருத்துக்களை நடைமுறைப்படுத்தவும், தொடர்பு மற்றும் உரையாடலை வலுப்படுத்தவும், சீன மற்றும் ஜெர்மனி விரிவான நெடுநோக்கு கூட்டாளி உறவை புதிய நிலைக்கு கொண்டு வரவும் சீனா விரும்புவதாகவும் ஹன் செங் தெரிவித்தார்.
ஜோஹன் வதேபுல் கூறுகையில், சீனாவுடனான உறவுகளை வளர்ப்பதில் ஜெர்மனி அரசு அதிகமான கவனம் செலுத்தி, ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியுடன் கைபிடித்து வருகின்றது என்று தெரிவித்தார். மேலும், சீனாவுடன் நெருக்கமான உயர்மட்ட பரிமாற்றங்களை மேற்கொள்வதையும், விரிவான ஒத்துழைப்பையும் மேலும் ஆழப்படுத்துவதையும் எதிர்பார்க்கின்றோம் என்றும், ஜெர்மனி சீனாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்க விரும்புகின்றோம் என்றும் வதேபுல் தெரிவித்தார்.
