ஏப்ரல் முதல் நாள் தொங்கி, சீன மக்கள் விடுதலை படையின் கிழக்குப் போர் மண்டலம் தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் பரப்பில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது.
இந்த இராணுவப் பயிற்சி, லாய் சிங்டே அதிகார வட்டாரத்தின் வெறித்தனமான சுதந்திரம் மற்றும் ஆத்திரமூட்டலுக்கு உறுதியான தண்டனையாகும். தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தின் உறுதியான பாதுகாப்பாகும்.
தேசிய இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கை இதுவாகும். 2024ஆம் ஆண்டின் மே திங்கள் லாய் சிங்டே பதவியேற்றதிலிருந்து, தைவான் சீனாவைச் சேராதது என்ற புதிய இரு நாட்டுக் கோட்பாட்டை அவர் இடைவிடாமல் பறைச்சாற்றி, சீனப் பெருநிலப்பகுதியை “வெளிநாட்டுவிரோத சக்தியாக வெளிப்படையாக பறைச்சாற்றினார்.
அண்மையில், லாய் சிங்டே அதிகார வட்டாரம் இரு கரை ஒருங்கிணைப்பிற்கு ஆதரவு தெரிவித்த பெருநிலப்பகுதியைச் சேர்ந்த தைவான் மக்களைத் திருமணம் செய்த பலரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதனால் பல குடும்பங்கள் பிரிந்தன.
தைவான், சீன மக்கள் குடியரசின் புனித உரிமைப் பிரதேசங்களிலுள்ள ஒன்றாகும். லாய் சிங்டே அதிகார வட்டாரம் முதலில் தூண்டுதலை செய்தது. பின்னர் சீன நிலப்பகுதி தண்டித்து இதற்குப் பதிலளித்தது. சீன மக்கள் விடுதலை படையின் இராணுவப் பயிற்சி, தைவான் சுதந்திர மற்றும் பிரிவினைவாத சக்திகளை வலிமையாகத் தடுக்கின்றது.
தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தையும் தைவான் சகநாட்டவர்களின் நலன்களையும் உறுதியாகப் பாதுகாப்பது தான் இதுவாகும்.