நியூயார்க் விமான நிலையத்தில் பயங்கரம்:தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏர் கனடா விமானம்  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23, 2026) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த ‘ட்ரக் 1’ என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து சிதைந்து போயிருப்பது தெரியவந்துள்ளது.

You May Also Like

More From Author