ஜப்பான், படையினரால் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்கள் பற்றிய வரலாற்றை சரிவர எதிர்கொள்ளுமாறு, ஐ.நா தனிப்பட்ட நிபுணர்களும், சீன மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 61வது கூட்டத் தொடரில் வற்புறுத்தினர்.
பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்கள், உண்மையையும் நீதியையும், இழப்பீடுகளையும் பெறுவதற்கான உரிமையை ஜப்பான் பறித்துள்ளது.
இது குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் சிறப்பு அமைப்பு முறையின் 16 நிபுணர்கள் வெளியிட்ட கூட்டுச் செய்தியில் கடும் கவலையைத் தெரிவித்து, ஜப்பான், மன்னிப்பு கேட்பதுடன், போதுமான இழப்பீடு வழங்கி, பாடநூல்களில் வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சுமார் 2 இலட்சம் பெண்களும் பெண் குழந்தைகளும், ஜப்பானின் பாலியல் அடிமைகள் முறைமையில், சுதந்திரம் இழந்து, ஆள் கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் சிக்கிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா, தென்கொரியா, நெதர்லாந்து, கிழக்குத் திமோர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளைச் சேர்ந்த இந்த பெண்கள் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். இந்த முறைமையின் கீழ் எஞ்சியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு நியாயத்தை வழங்குவதில் ஜப்பான் தோல்வியடைந்துள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
