பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் இன்று (ஜனவரி 26) அதிகாலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்/வி திரிஷா கெர்ஸ்டின் 3 (M/V Trisha Kerstin 3) என்ற சரக்கு மற்றும் பயணிகள் கப்பல், ஜாம்போங்கா நகரிலிருந்து ஜோலோ தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இதில் 332 பயணிகளும் 27 ஊழியர்களும் இருந்தனர். நள்ளிரவு தாண்டிய வேளையில், பாசிலான் மாகாணத்தில் உள்ள பலுக்-பலுக் தீவு அருகே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரென மூழ்கத் தொடங்கியது.
பிலிப்பைன்ஸில் 350 பேருடன் சென்ற கப்பல் விபத்து: 13 பேர் உயிரிழப்பு
