மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய பொது ஒப்பந்தத்தில் பங்கேற்ற நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அமர்வுக் கூட்டம் ஜூன் 9 முதல் 11ஆம் நாள் வரை நியுயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதிநிதிக் குழுவை சீனா அனுப்பியது.
பொது விவாதம், வட்ட மேசை கூட்டங்கள், துணை கூட்டங்கள் ஆகியவற்றில் சீனப் பிரதிநிதிக் குழு பங்கேற்று, இந்த பொது ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி, மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் சீனாவின் கருத்து மற்றும் நடைமுறைகளை அறிமுகம் செய்ததோடு, மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளை உத்தரவாதம் செய்வதில் சீனாவின் ஞானம் மற்றும் திட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பான நாடாக சீனா திகழ்கிறது என்பதை இது மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
இக்கூட்டத்தின்போது, சீனாவின் வேட்பாளரும் ஹைனான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சாங் ஜியன், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐ.நா. கமிட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தவிரவும், சீன மாற்றுத்திறனாளிகளின் கலாசார படைப்புகள் கண்காட்சியும், வறுமை குறைப்பு சாதனை கண்காட்சியும் ஐ.நாவில் நடைபெற்றன.
