மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
“மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் மிகவும் கவலை அளிக்கிறது. இது ஒட்டுமொத்த உலகையும் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளது,” எனத் தனது உரையைத் தொடங்கிய பிரதமர், இந்தப் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட காலத் தாக்கங்களை விளக்கினார்.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
‘மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி’: மக்களவையில் பிரதமர் மோடி கவலை
