இரண்டு கூட்டத்தொடர்கள் நேரத்தில் கவனிக்கத்தக்க விவகாரங்கள்

தற்போதைய சர்வதேச நிலைமை 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆழ்ந்த முறையில் மாறி வருகிறது. சீனா பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாக, நடப்பாண்டில் சீனாவின் இரண்டு கூட்டத்தொடர்கள் சர்வதேச சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விரு கூட்டத்தொடர்களை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன், சிங்ஹுவா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2026ஆம் ஆண்டின் மிக முக்கிய விவகாரங்கள் பற்றிய முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு, 10 முக்கிய சர்வதேச விவகாரங்களையும் சீனா தொடர்பான 10 முக்கிய விவகாரங்களையும் முன்வைத்துள்ளது.

பிரதேச மோதல் மற்றும் பாதுகாப்பு மீதான உலகளாவிய கவனம், மேற்கத்திய பொதுமக்கள் ஆதரவு வாதத்தின் சமூகத் தாக்கம், Generative AI மற்றும் ஒழுங்குமுறைப் போட்டி, பொது சுகாதார அமைப்பில் உறுதித்தன்மையின் கட்டுமானம், காலநிலை நெருக்கடி மற்றும் தீவிர வானிலையின் இயல்பாக்கம், டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் நிதி தொழில்நுட்ப இடர்கள், நீர்வள மோதல் மற்றும் ஆற்றுப்பள்ளதாக்குகள் மீதான போட்டி, உணவு பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பஞ்சத்தின் இடர், உலக அகதி மற்றும் குடிபெயர்வு நெருக்கடி தீவிரம், உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சி மற்றும் புதிய உலக ஒழுங்கு ஆகியவை 10 முக்கிய சர்வதேச விவகாரங்காகும்.

சீனா தொடர்பான 10 முக்கிய விவகாரங்களில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் தொடக்க ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவு, தானிய உற்பத்தித் திறனை 50 மில்லியன் டன்களை அதிகரிப்பதற்கான புதிய முன்னெடுப்பு, முக்கிய துறைகளில் மைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் சாதனைகள், உள்ளூர் நிதி மாற்றம் மற்றும் வீட்டு நிலச் சொத்து துறைக்கான புதிய வளர்ச்சி மாதிரி, ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு கருத்தாக்கத்தின் கீழுள்ள இடர் மேலாண்மை, டிஜிட்டல் சீனா மற்றும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த தரவு சந்தையின் கட்டுமானம், வேலைவாய்ப்பின் புதிய வடிவங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கு நட்பார்ந்த வளர்ச்சி மாதிரிகள், ஆரோக்கியமான சீனா முன்மொழிவு மற்றும் திருமணம், குழந்தைப்பேறு மற்றும் முதியோர் பராமரிப்பு முறைமையின் மறுசீரமைப்பு, பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இரட்டை சுழற்சி கட்டமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 

Please follow and like us:

You May Also Like

More From Author