தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த AK:தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புதிய நிறுவனம் பதிவு  

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தற்போது தயாரிப்புத் துறையிலும் அதிகாரப்பூர்வமாக தடம் பதித்துள்ளார்.
‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி’ என்ற பெயரில் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் நடிகராக முத்திரை பதித்து வரும் அஜித், தற்போது தனது சொந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே பல முன்னணி நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author