ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்!

Estimated read time 0 min read

ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.

8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும். 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும்.

ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலாகின்றன.

You May Also Like

More From Author