“ஆ.ராசா பதிவால் வெடித்த பூகம்பம்..!” – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட ‘அந்த’ தடை உத்தரவு..!! 

Estimated read time 1 min read

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து திமுக ஆ.ராசாவின் எக்ஸ் (X) பதிவு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தவொரு கட்சிக்கும் உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழர்களான விசிக-வின் வன்னியரசு மற்றும் ஐயூஎம்எல்-லின் ஏ.எம். ஷாஜகான் ஆகியோருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்த திமுகவினர், நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆ.ராசாவின் பதிவால் கூட்டணியில் விரிசல் விழும் சூழல் உருவான நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டுத் தொண்டர்களை அமைதிப்படுத்தியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

“>

You May Also Like

More From Author