சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு

சென்னையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத அளவு கனமழை பெய்தது.
இதன்காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

கூடுதலாக இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் கிட்டத்தட்ட 35 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.
டெல்லி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்கள், தரையிறங்க முடியாமல் தாமதமாகி வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல சென்னையிலிருந்து அபுதாபி, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு புறப்பட வேண்டிய 18 விமானங்களும் தாமதமாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author