சமீபத்தில், பப்புவா நியூ கினி நாட்டின் அரசு அதிகாரி பீடெர் கேர் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது, ‘புல் மூலம் செல்வம் வருவது’ என்ற கதையை அறிந்து கொண்டார். சீன மொழியில் ‘ஜுன்சாவ்’ என அழைப்படும் மூலிகை தாவரங்கள் மூலம் காளான் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சொந்த நாட்டில் மேலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பப்புவா நியூ கினியைத் தவிரவும், தற்போது, ஜுன்சாவ் தொழில்நுட்பம், உலகின் 106 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஐ.நா.வின் நிலையான வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கு உண்மையான உந்து சக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் உலகின் கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் சீனாவின் பங்களிப்பில் உள்ள ஒரு மாதிரியாக திகழ்கிறது.
வளர்ச்சி என்பதே, பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் திறவுகோல் ஆகும். 2022ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் நாள் நடைபெற்ற உலக வளர்ச்சி பேச்சுவார்த்தையில், உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பை நடைமுறைப்படுத்துவதற்கான 32 அம்ச நடவடிக்கைகளை சீனா அறிவித்தது.
கடந்த ஆண்டில் இந்த நடவடிக்கைகள் எப்படி நடைமுறைக்கு வந்தவை என்பதைத் தெரிந்து கொள்கிறோம். சீனா 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், பாதியளவு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லது முதற்கட்ட சாதனைகளைப் பெற்றுள்ளன.
உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பை முன்வைத்த சீனா, சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து, விடாமுயற்சியுடன் அதைச் செயல்படுத்தி வருகிறது. கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் சீனா பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.