இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் பணியாற்றும் பெண் குறுகிய கால சேவை (SSC) அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி நியமனம் (Permanent Commission) வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் ராணுவத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பாலினப் பாகுபாட்டை நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பில், பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்க மறுப்பது அப்பட்டமான பாகுபாடு என்று சுட்டிக்காட்டப்பட்டது.
“ஆண் அதிகாரிகள் மட்டுமே நிரந்தரப் பணியைப் பெற முடியும் என்ற எண்ணம் மாற வேண்டும். பெண்களுக்கான வருடாந்திர ரகசிய அறிக்கைகள் (ACR) அவர்கள் தகுதியற்றவர்கள் என்ற முன்முடிவோடு தயாரிக்கப்பட்டுள்ளன,” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
