‘நீண்ட கால பாதிப்பு ஏற்படும்’: மேற்கு ஆசியப் போர் குறித்து பிரதமர் மோடி  

Estimated read time 0 min read

மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசியப் போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் எச்சரித்துள்ளார்.
இந்த போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் வர்த்தகப் பாதை முடக்கம் குறித்து அவர் தனது கவலையைப் பதிவு செய்தார்.
“இந்தப் போர் உலக அளவில் கடுமையான எரிபொருள் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உர விநியோகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நமது பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. நிலைமையைச் சமாளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,” எனப் பிரதமர் உறுதியளித்தார்.

You May Also Like

More From Author