திரையரங்க வருவாயை பாதுகாக்க புதிய விதிமுறைகள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி  

Estimated read time 1 min read

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், திரையரங்குகளில் கிடைக்கும் வருவாயைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் அவற்றின் ஓடிடி வெளியீடுகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
அதன் ஒரு முடிவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இனிமேல் தயாரிப்பாளர்களுடன் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டையும் பகிர்ந்து கொள்ளும் புதிய வருவாய் பகிர்வு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
திரையரங்கு, ஓடிடி, மற்றும் சாட்டிலைட் வருவாய் குறைந்து வருவதால், திரையரங்க வருவாயைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

You May Also Like

More From Author