இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 146 கோடி மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இது ஒருதலைமுறை மக்கள் தொகைக்கு நிகராகப் பிறக்க வேண்டிய குழந்தைகளின் விகிதமான 2.1 உடன் ஒப்பிடுகையில் இது பூஜ்ஜியம் புள்ளி இரண்டு சதவிகிதம் குறைவாகும். பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் அதிகமாகவும் டெல்லி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் குறைவாகவும் உள்ளது.
நகர்ப்புற மற்றும் படித்த, நடுத்தர தம்பதிகள், அதிகரித்து வரும் செலவுகள், பணிச்சுமை காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயர்ந்து பின்னர் குறைய தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.