சீன சொத்து அமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் சீனா

காலையில் சீன வளர்ச்சி பற்றிய உயர் நிலை கருத்தரங்கில் கலந்துகொண்ட ஜெர்மனி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாலை, சீன வணிக அமைச்சகம் உள்ளிட்ட பல வாரியங்களில் பயணம் மேற்கொண்டனர். கடந்த சில நாட்களில் அவர்கள் முக்கிய துறைகளிலுள்ள வளர்ச்சியை விரிவுப்படுத்தி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் வாய்ப்புகளைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.

சீன-ஜெர்மனி வணிக சம்மேளனம் அண்மையில் வெளியிட்ட 2025 முதல் 2026ஆம் ஆண்டு வரை, வணிக நம்பிக்கை பற்றிய கள ஆய்வு அறிக்கையின் படி, சீனாவில் முதலீடு செய்த 93 விழுக்காடான ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சீன சந்தையின் மீது நம்பிக்கை கொள்கின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் சீனாவிலுள்ள முதலீட்டு அளவை விரிவாக்கும் என்று இவற்றில் பாதியளவான ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.

உயர் நிலை வளர்ச்சியின் மூலம் புதிய சந்தையை உருவாக்குவது, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். வாகன தொழிற்துறைக்காக, புதுப்பிப்பு மூலம், புதிய தொழிற்துறையை உருவாக்குவது, பொருளாதாரத்திற்கு துணை புரியும் என்று வாக்ஸ்வேகன் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author