2024ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சீனாவின் சேவை வர்த்தகம் 16 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் தூண்டப்பட்டுள்ளது என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் மே மாதம் வரை, சீன சேவை வர்த்தகத்தின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு 3.02 டிரில்லியன் யுவானை எட்டியது. இதில் ஏற்றுமதி 11 விழுக்காடு அதிகரித்து 1.22 டிரில்லியன் யுவானையும் இறக்குமதி 19.6 விழுக்காடு அதிகரித்து 1.8 டிரில்லியன் யுவானையும் எட்டியது. இதன் விளைவாக சேவை வர்த்தகப் பற்றாக்குறை 580 பில்லியன் யுவானாக இருந்தது.
சுற்றுப்பயணச் சேவையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி 48.4 விழுக்காடு அதிகரித்து, 819.72 பில்லியன் யுவானை எட்டி உயர் வளர்ச்சி விகிதத்தைப் பராமரித்தது. சேவை வர்த்தகத்தில், சுற்றுப்பயணச் சேவை மிகப்பெரிய பகுதியாக விளங்கியது.
அறிவு-தீவிர சேவை வர்த்தகத்தின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு 1.19 டிரில்லியன் யுவானை எட்டி, 6 விழுக்காடு அதிகரித்தது. இதில், ஏற்றுமதி 2.8 விழுக்காடு அதிகரித்து 675.31 பில்லியன் யுவானையும் இறக்குமதி 10.4 விழுக்காடு அதிகரித்து 514.58 பில்லியன் யுவானையும் எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.