15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புத்தாக்கத்தின் சக்தி

Estimated read time 0 min read

நூற்றாண்டுகளில் காணாத நிலைமை வேகமாக மாறி வரும் நிலையில், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம் அதற்கான திறவுகோலாகும். 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதை முக்கிய நெடுநோக்குக் கடமையாகக் கொண்டு அறிவியல் தொழில்நுட்ப துறையில் உயர் நிலை சுதந்திரத்தையும் வலிமையையும் விரைவாக நனவாக்க வேண்டுமென சீனா முன்வைத்துள்ளது.

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். நிறுவனம் உலக இணைய பயனர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட அறிவியல் தொழில்நுட்ப போட்டி நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலின் போட்டியில் முக்கிய அம்சமாக மாறுமென இக்கணிப்பில் பங்கேற்ற 90.4விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், சீனா வளங்களைப் பயனுள்ள முறையில் ஒன்றிணைத்து முக்கிய துறைகளிலுள்ள தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். அமைப்பு முறையிலுள்ள சீனாவின் சாதகத்தை இது வெளிக்காட்டியுள்ளது என்று 92.8விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

சீனாவின் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் அளவிற்கு அப்பாற்பட்ட சந்தை புத்தாக்க சாதனைகளை நனவாக்குவதற்கு நிபந்தனைகளை வழங்கும் என்று 84.1விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author