சீனாவின் வூ ஹான் பல்கலைக்கழகம், எகிப்தின்பென்ஹா பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக நடத்தும் ஐ.நா 80வது ஆண்டு நிறைவின்
சர்வதேசக் கல்வியியல் கருத்தரங்கு 18ம் நாள் வூ ஹான் நகரில் துவங்கியது.
ஐ.நா முன்னாள் துணை பொதுச் செயலாளர் சுயரேஸ்
உள்ளிட்டோர் இதில் பங்கெடுத்துக் கூறுகையில், ஐ.நா நிறுவப்பட்ட 80வது ஆண்டு
நிறைவுக்காக, 2வது உலக போரின் வெற்றி சாதனைகளையும் போருக்குப் பிந்தைய சர்வதேச
ஒழுங்கையும் பாதுக்காக்க வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றி, கைரோ
அறிக்கை, ஐ.நா பேரவையின் 2758வது தீர்மானம் முதலிய சர்வதேச சட்ட ஆவணங்களின்படி,
தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமமான
இறையாண்மை உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஊன்றி நின்று,
சர்வதேச விவகாரங்கள் குறித்த ஐ.நாவின் மையமான பங்கை ஆதரித்து, பலதரப்புவாதத்தைக்
கூட்டாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
