2024ஆம் ஆண்டில் சீனாவின் “கசகஸ்தான் சுற்றுலா ஆண்டு”எனும் நிகழ்ச்சி துவங்கியது முதல், கசகஸ்தானுக்கு சுற்றுலா செல்லும் சீன பயணிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். சிட்ரிப் எனும் சுற்றுலா சேவை இணையத்தளம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டில் கசகஸ்தானுக்கு சுற்றுலா செல்லும் சீனப் பயணிகளின் முன்பதிவுகள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 229 விழுக்காடாகவும் 2019ஆம் ஆண்டை விட 262 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
கசகஸ்தான் செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்தபோது கசகஸ்தானுக்கான சீனத் தூதர் ஜாங் சியாவோ கூறுகையில்,
இவ்வாண்டின் மார்ச்சில், சீனாவில் “கசகஸ்தான் சுற்றுலா ஆண்டு” நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. சீனச் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான நாடுகளில் கசகஸ்தான் ஒன்றாகும்.
கடந்த நவம்பர் திங்கள், சீனா மற்றும் கசகஸ்தானிடையே ஒன்றுக்கு ஒன்று விசா விலக்குக் கொள்கை அமலுக்கு வந்ததுடன், இரு நாட்டு மக்கள் சுற்றுலா செல்வது மேலும் வசதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.