மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் விடுத்துள்ள கோரிக்கையில், “பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் ஒப்புக்கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தப் பாகிஸ்தான் தயாராக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பதிவைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மத்தியஸ்தம் செய்யத் தயார் என பாகிஸ்தான் அறிவிப்பு; ஆமோதித்த அமெரிக்கா
